நடிகை யாசிகா தற்கொலை..!!

506
actrees-yashika

திருப்பூரை சேர்ந்தவர் யாசிகா (வயது 21). சினிமா துணை நடிகையான இவர், நடிகர் விமல் நடித்த ‘மன்னர் வகையறா’ என்ற படத்தில் துணை நடிகையாக நடித்து உள்ளார்.

Image result for yashika suicide

யாசிகாவுக்கு, செல்போன் சர்வீஸ் கடையில் வேலை செய்துவந்த பெரம்பூரை சேர்ந்த மோகன்பாபு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது.

திருமணம் செய்து கொள்ளாமலேயே இருவரும் கடந்த 4 மாதங்களாக பெரவள்ளூரில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கணவன்-மனைவி போல் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு யாசிகா, தனது வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையில் யாசிகா, தான் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக, ‘நம்பி வந்த என்னை ஏமாற்றி, திருமணம் செய்து கொள்ளாமல் கொடுமைப்படுத்திய காதலன் மோகன்பாபுவுக்கு, நான் இறந்த பிறகு தக்க தண்டனை பெற்று கொடுக்க வேண்டும்’ என தனது தாயாருக்கு ‘வாட்ஸ்-அப்’பில் தகவல் அனுப்பி இருந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.