டோனியின் ஸ்டைலை பின்பற்ற வேண்டாம் – ஆடம் சொன்ன அட்வைஸ்

409

கிரிக்கெட் உலகில் உச்சம் தொட்ட சில தலைசிறந்த சில வீரர்களில் ஒருவர் தான் ஆடம் கில்க்றிஸ்ட். விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர். அவருக்கு முன் ஆஸ்திரேலிய அணியின் நீண்ட கால விக்கெட் கீப்பராக இருந்தவர் இயன் ஹீலி.

அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த ஆடம் எனக்கு முன்னோடியாக இயன் ஹீலி இருந்தாலும் நான் ஹீலி ஸ்டைலை பின்பற்ற முயற்சி செய்ததில்லை. அதபோல் ரிஷப் பந்த் எம்எஸ் டோனியின் ஸ்டைலை பின்பற்ற முயற்சிக்கக் கூடாது என கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில் ‘‘இந்திய ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு என்னுடைய முதல் ஆலோசனை என்னவென்றால், எம்எஸ் டோனியுடன் ரிஷப் பந்தை ஒப்பிடும் முயற்சியில் ஈடுபடக்கூடாது என்பதுதான்.

டோனியை பற்றி அவர்கள் உருவாக்கிய பிம்பத்திற்கான அச்சு, அப்போதே சிதைக்கப்பட்டு விட்டது. எனவே, அந்த அச்சில் மீண்டும் ஒரு தயாரிப்பை உருவாக்க முடியாது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of