வரும் தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை – தமிழக அரசு | Tamil Nadu Government

527

வரும் அக்டோபர் 27ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது, இந்நிலையில் தங்களது சொந்த ஊருக்கு செல்பவர்கள் திரும்பிவர அவகாசம் அளிக்கும் வகையில் அடுத்த நாளான 28ம் தேதியை விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவித்தால் நல்லது என பலதரப்பில் இருந்து தமிழக அரசுக்கு கோரிக்கைகள் வந்தன.

குறிப்பாக, பள்ளி செல்லும் மாணவ-மாணவியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் வெளியூர்களில் இருந்து திரும்பிவர ஒருநாள் கூடுதல் விடுமுறை அளிக்க வேண்டும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், வரும் 28-ம் தேதியை விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, தமிழக அரசின் சார்பில் இன்றிரவு வெளியான அறிவிப்பில் இந்த கூடுதல் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் அரசு விடுமுறை நாளான 9-11-2019 சனிக்கிழமை அன்று அரசு அலுவலகங்கள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of