ஆதார் வேண்டுமா? வேண்டாமா? என்று தேர்வு செய்யும் வாய்ப்பு

430

ஆதார் வேண்டுமா? வேண்டாமா? என்பதை பொதுமக்களே தேர்வு செய்யும் வாய்ப்பை வழங்க மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆதார் எண்ணை தனியார் நிறுவனங்கள் அடையாள ஆவணமாகப் பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

அதேசமயம் பான் அட்டையுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என உறுதி செய்தது.
இதனிடையே ஒரு நபர் 18 வயது பூர்த்தியடைந்ததும், ஆதார் வேண்டுமா? வேண்டாமா என முடிவெடுத்துக் கொள்ளலாம் என ஆதார் ஆணையம் சட்டத் திருத்தத்தை முன்மொழிந்து மத்திய சட்டத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆதார் எண், பயோ மெட்ரிக் தகவல் உள்ளிட்ட அனைத்தையும் திரும்பப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பை அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் வகையில் சட்டத் திருத்தம் அமையும் எனக் கூறப்படுகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of