இயக்குநர் பாலா படத்தில் வில்லனாக அறிமுகமாகும் அதர்வா..!

639

சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள் போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநராக மாறியவர் பாலா.

இவர், அடுத்ததாக இயக்கும் திரைப்படத்தில், ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிப்பதாகவும், ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கு இருப்பதாகவும், கூறப்பட்டது.

இந்நிலையில், இந்த படத்தில், நடிகர் அதர்வா வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குநர் பாலாவின் பரதேசி படத்தில், அதர்வா கதாநாயகனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement