மேற்கு வங்க மாநிலம் ஒரு சர்க்கஸ் : இதில் ஆளுநர், முதல்வர் ஜோக்கர்கள் – அதிர் ரஞ்சன் விமர்சனம்

146

குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் சார்பில் போராட்டங்களும், பாஜக சார்பில் ஆதரவு பேரணிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், மேற்கு வங்க மாநிலம் மித்னாபூரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் அதிர் ரஞ்சன் சவுதிரி, மேற்கு வங்க மாநிலத்தில் சர்க்கஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருவதாகவும், இதில் ஆளுநர் ஜக்தீப் தான்கரும், முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் ஜோக்கர்கள் எனவும் விமர்சித்தார்.

இதனிடையே, குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தை மம்தா பானர்ஜி புறக்கணித்தது, குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of