அதிமுக தேமுதிக கூட்டணி கன்பார்ம்! ஓ.பி.எஸ் பேட்டி!!

1009

வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழக அரசியலில் பல்வேறு பரபரப்பான நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தின் முக்கிய கட்சிகளான, அதிமுக மற்றும் திமுக ஆகியன தங்களது கூட்டணி கட்சிகளை உறுதி செய்துள்ளது.

ஆனால் தேமுதிக கட்சி மட்டும், எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கப்போகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கமால் இருந்தது.

மேலும், தேமுதிகவுடன் கூட்டணி வைப்பதற்காக, அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகளுடன் இழுபறி சூழ்நிலை இருந்து வந்தது.

இந்நிலையில் இன்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி வைப்பது உறுதியாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Advertisement