அதிமுக, திமுக-வினர் இடையே கைகலப்பு

140

உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஊரக வளர்ச்சி திட்ட பணிகளுக்கான டெண்டர் தொடர்பாக, அ.தி.மு.க, தி.மு.க-வினர் இடையே கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் குடிநீர்  குழாய் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக சுமார் 10 லட்சம் ரூபாய் மதீப்பீட்டில் டெண்டர் விடப்பட்டது.

இதில் தி.மு.க, அ.ம.மு.க கவுன்சிலர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், அ.தி.மு.க கவுன்சிலர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் அ.தி.மு.க கவுன்சிலர்கள், தங்களுக்கு முறைப்படி அழைப்பு விடுக்காமல், டெண்டர் விட்டதால், அதனை நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இதனால் அ.தி.மு.க, தி.மு.க-வினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனால் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 2 மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு நிலவியது.