பிரதான சாலையில் வைக்கப்பட்ட அதிமுக பேனர்..! இளம்பெண்ணுக்கு நேர்ந்த பகீர் சம்பவம்..!

487

சென்னை பள்ளிகரணையில், அதிமுக பிரமுகர் வைத்திருந்த பேனர் விழுந்ததில், இளம்பெண் மீது, லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இளம்பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, பள்ளிக்கரணையில், சாலை ஓரத்தில், அதிமுக கட்சி பிரமுகர் வைத்திருந்த பேனர் விழுந்தது. அதனால், வாகனத்தில் சென்றுகொண்டிருந்த சுபஸ்ரீ என்ற 23 வயது பெண், நிலைதடுமாறி விழுந்தபோது, அவர் மீது லாரி மோதியது. இந்த விபத்தில் சுபஸ்ரீ உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து, லாரி ஓட்டுநர் மனோஜ் என்பவரிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of