மக்களை தேர்தல் பரபரப்பு.., விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணலை துவங்கியது அதிமுக

128

நடக்க இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதி, பாஜகவுக்கு 5 தொகுதி மற்றும் தேமுதிகவுக்கு 4 தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் இன்றும், நாளையும் நேர்காணல் நடைபெற உள்ளது. இன்றைய தினம் மக்களவை தொகுதிகளுக்கு நேர்காணல் நடைபெற உள்ளது.

கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடும் என்ற அறிவிப்பு வெளியாகாத நிலையில் 39 தொகுதிகளுக்கும் அதிமுக நேர்காணல் நடத்தி வருகிறது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி
கே. பழனிசாமி ஆகியோர் நேர்காணலை நடத்தி வருகின்றனர்.