” பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள்” – அதிமுக,பாஜக ஓட்டு கேட்டு வராதீர்கள்… – திருப்பூர் மக்களின் போஸ்டரால் பரபரப்பு

1855

திருப்பூரில், ”இந்த வீதிகளில் பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள். எனவே அதிமுக – பாஜக இங்கு ஓட்டு கேட்டு வர வேண்டாம்” என போஸ்டர் ஒட்டியிருப்பது மெகா கூட்டணிக்கு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் திருப்பூரில் அதிமுக – பாஜக இங்கு வந்து ஓட்டு கேட்க வேண்டாம், இங்கு பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள் என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

திருப்பூரில் தென்னம்பாளையம், வெள்ளியங்காடு, பட்டுகோட்டையார் நகர் என பல்வேறு பகுதிகளில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இது அதிமுக – பாஜகவினருக்கு மிகப்பெரிய அவமானமாக பார்க்கப்படுகிறது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுகவிற்கு தொடர்பு, மேலும் பாஜக ஆட்சியில் அரங்கேறும் பெண் பிள்ளைகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் ஆகியவற்றை மனதில் வைத்து மக்கள் இவ்வாறு தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதை தவிர்த்து மேலும் சில இடங்களில் திருப்பூர் பனியன் தொழிலை நாசமாக்கிய அதிமுக – பாஜக இங்கு ஓட்டு கேட்டு வர வேண்டாம் எனவும் ஒட்டப்பட்டுள்ளது.

No photo description available.

இதில் ஜிஎஸ்டியால் வந்த எதிர்ப்பு என தெரிகிறது. இதனால், அதிமுகவினர் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of