அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடுவதில் இழுப்பறி

413

சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கு மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்கான வேட்பாளர்களை தி.மு.க, அ.ம.மு.க ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன.

இந்நிலையில் 4 தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டமும், நேர்காணலும் நடைபெற்றது.

இதில் அதிமுக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு பின்னர் அ.தி.மு.க வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என கூறப்பட்ட நிலையில், அக்கட்சியின் வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of