தேமுதிக விற்கு எத்தனை சீட்? – அதிமுக – தேமுதிக கூட்டணி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

814

மக்களவை தேர்தலையொட்டி அதிமுக – தேமுதிக கூட்டணி உறுதியாகியுள்ளதாகவும், இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு தொகுதிகளை ஒதுக்குவதில் இழு‌பறி நீடித்துவந்த நிலையில் தற்போது பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் தேமுதிகவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேமுதிகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருவதாகவும், விஜயகாந்த் நல்ல முடிவை அறிவிப்பார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார்.

அதேபோல அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றால் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவோம் என பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of