இடைத்தேர்தல் குறித்து விஜயகாந்த் மகன் போட்ட குண்டு..! – அதிமுக -தேமுதிக கூட்டணி உடைகிறதா?

418

கடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தேமுதிக, அதிமுகவுடனான கூட்டணியை தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விஜய பிரபாகரனின் பேச்சால் அதிமுக-தேமுதிக கூட்டணி உடைகிறதா என கேள்வி எழுந்துள்ளது.

இன்று செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன், தேமுதிக தலைமை கூறினால் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட தயார் என கூறியுள்ளார்.

ஏற்கனவே விக்கிரவாண்டி அருகில் உள்ள விருத்தாச்சலம் தொகுதியில் விஜயகாந்த் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

அதிமுக கூட்டணியில் இருந்து கொண்டே அதிமுகவை எதிர்த்து போட்டியிடுவது சாத்தியமில்லை என்பதால் ஒருவேளை தேர்தலில் போட்டியிட தேமுதிக முடிவு செய்துவிட்டால், அதிமுக கூட்டணியில் இருந்து விலகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் கூட்டணியிலிருந்தே ஜெயிக்க முடியாத தேமுதிக தனித்து போட்டியிட்டு ஜெயிக்கமுடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of