அதிமுக – தேமுதிக கூட்டணி – இன்று இறுதி முடிவு?

131

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுப்பதற்காக தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

ops vijayakanth

அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க, பா.ஜ.க, புதிய தமிழகம், புதிய நீதி ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த கூட்டணியில் தே.மு.தி.க-வை இணைக்க அ.தி.மு.க-வும், பா.ஜ.க-வும் தீவிரம் காட்டி வருகின்றன.

ஆனால் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வருவதால் கூட்டணி இறுதி செய்யப்படாமல் உள்ளது. பிரதமர் மோடி நாளை தமிழகம் வர உள்ளதால், அதற்குள் கூட்டணியை இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

ops vijayakanth

இந்நிலையில் தே.மு.தி.க ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் விஜயகாந்த் தலைமையில் இன்று காலை நடைபெறுகிறது. இதில் கூட்டணி தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.