மத்திய அரசுக்கு அடிமையாக அதிமுக செயல்படுகிறாது – டிடிவி

347
ttv-dhinakaran

ஜெயலலிதாவின் ஆட்சி என்று சொல்லி ஆட்சி நடத்துபவர்கள் மத்திய அரசுக்கு கையை கட்டி வாயை பொத்தி அடிமையாக செயல்பட்டு வருவதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

ஈரோட்டில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய அவர், ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை மத்திய அரசால் ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் எரிவாயு திட்டம் போன்றவற்றை தமிழகத்தில் செயல்படுத்த முடியவில்லை என்றும் ஆனால் ஜெயலலிதாவின் பெயரை சொல்லி ஆட்சி நடத்துபவர்கள் மத்தியில் ஆள்பவர்களுக்கு சேவகர்களாக கையை கட்டி வாயை பொத்தி அடிமைகளாக சேவகம் செய்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.