அதிமுக சார்பில் பணப்பட்டுவாடா! பரபரப்பு வீடியோ வெளியீடு!

611

நாளை நாடாளுமன்ற தேர்தல் நடக்கவிருப்பதை முன்னிட்டு தமிழக அரசியல் களத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில் அதிமுக சார்பில் பணப்பட்டுவாடா செய்வது தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், அதிமுக முன்னாள் எம்எல்ஏ. கோவி சம்பத், கூட்டணி கட்சி நிர்வாகிகளிடம் பண விநியோகம் செய்வது போல காட்சி அமைந்துள்ளது.

ஏ.சி. சண்முகத்திற்கு வாக்களிப்போருக்கு பணம் சேர வேண்டும் என்றும், ஒரு ஓட்டுக்கு 500 தரலாம் என்றும் பேசியுள்ளார். இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.