அதிமுக -வினரிடையே கோஷ்டி மோதல் – பண்டகசாலை நாற்காலிகளை கொண்டு தாக்குதல்

496

திருவண்ணாமலையில் அ.தி.மு.க-வை சேர்ந்த இருதரப்பினர் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு பெயர்களும் அறிவிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பு அ.தி.மு.க-வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. நாற்காலிகள், பலகைகளை கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த மோதலில் கூட்டுறவு பண்டக சாலையில் இருந்த பொருட்களும் அடித்து நொறுக்கப்பட்டன.