ராஜேந்திர பாலாஜியை பொறுப்பாளராக நியமித்த அதிமுக தலைமை

169

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்களான ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுநகர் மாவட்ட அதிமுக பொறுப்பாளராக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நியமனம் செய்யப்பட்டுவதாக அறிவித்துள்ளனர்.

மேலும் விருதுநகருக்கு புதிய மாவட்ட செயலாளர் நியமிக்கும் வரை ராஜேந்திர பாலாஜி  நீடிப்பார் என்றும் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜேந்திர பாலாஜியின் கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால், விருதுநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையி்ல், அவருக்கு மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டலங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. சென்னை, வேலூர், கோவை, திருச்சி, மதுரை என 5 மண்டலங்களாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of