டிஜிட்டலாக தேர்தலை எதிர்கொள்ளும் அதிமுக!

287

பாஜக, காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகள் டேட்டா அனலைசிஸ்ட் மற்றும் ஐஐடி, ஐஐஎம் மாணவர்களை வேலைக்கு எடுத்து தொழில்நுட்பம் மூலம் தங்களின் கட்சி பற்றியான செயல்பாடுகளை டிஜிட்டல் விளம்பரங்களாக மக்களிடம் கொண்டு சேர்த்து வருகின்றனர்.

நாட்டிலேயே முதல் முதலாக தகவல் தொழில்நுட்பப் பிரிவு என்ற அணியை அஇஅதிமுகவில் உருவாக்கியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.

இந்த நிலையில் வரும் 2019 பொதுத்தேர்தலுக்கு அஇஅதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு, சென்னையில் கார்பரேட் அலுவலகத்தை போல் தனி அலுவலகம் அமைத்து, சிங்கை ராமசந்திரன் தலைமையில் 30 க்கும் மேற்பட்ட முன்னணி தொழில்நுட்பப் பிரிவை சேர்ந்த இளைஞர்களை கொண்டு ஒரு குழு அமைத்து கடந்த இரண்டு மாதங்களாக இயங்குவதாக தகவல் வெளியாகயுள்ளது.

இந்த குழு மொத்த வாக்காளர்களை கணக்கிட்டு வயது, பாலினம், கல்வி, வேலைவாய்ப்பு, படித்தவர், படிக்காதவர், இளைஞர்கள், முதியோர் என அதற்கு ஏற்றாற்போல் 14 வகைகளாக பிரித்து தனித்தனியாக ஒவ்வொருத்தருக்கும் அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சாதனைகளை இன்ஃபோகிராபிக்ஸ், வீடியோக்கள், மீம்ஸ்கள் மூலம் கொண்டு சேர்ப்பதற்கான முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது என்கின்றனர்.

அதுமட்டுமின்றி தொகுதி வாரியாக வாட்ஸ்அப் மூலம் மக்களை இணைப்பது, பூத் வாரியாக வகைபடுத்தி தகவல்களை கணக்கெடுத்து கொடுப்பது உள்ளிட்ட வேலைகளை கட்சி தலைமையின் வழிகாட்டுதலின்படி செய்ய துவங்கியுள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of