பத்திரிகையாளர்களுக்கு கப சுர குடிநீர் வழங்கி அமைச்சர் ஜெயக்குமார் பாராட்டு

252

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும்  நிலையில், துணிச்சலுடன் வெளியில் சென்று செய்தி சேகரிக்கும்  பத்திரிகையாளர்களுக்கு கப சுர குடிநீர் சூரணம் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார்.

சென்னை எழிலக வளாகத்தில் நமக்காக தொலைக்காட்சி மற்றும் இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்கம் இணைந்து நடத்திய கப சுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அமைச்சர் ஜெயக்குமார்  சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இந் நிகழ்ச்சியில், நமக்காக தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் ஷாநவாஸ்கான், லிங்க்ஸ் பார்மா உரிமையாளர் பிலிப்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஏராளமான பத்திரிகையாளர்களுக்கு கப சுர குடிநீரை, அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார். இந் நிகழ்வில், பத்திரிகையாளர்களும் அவர்களது உறவினர்களும் பங்கேற்றனர். கப சுர குடிநீர் மட்டுமின்றி,முகக் கவசங்கள், இலவச மளிகை பொருட்கள், கிருமி நாசினிகள் ஆகியவையும் வழங்கப்பட்டன.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of