காவல்துறையின் மனித சக்தி வீண் அடிக்கப்பட்டது – திமுக மீது ஜெயக்குமார் புகார்

302

சென்னை காசிமேடு கடற்கரையில் சுனாமியால் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அதிமுக சார்பில் அமைச்சர் டி. ஜெயக்குமார் உயிர் நீத்தவர்களின் படங்களுக்கு மலர் மாலை அணிவித்து படகில் சென்று கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடியுரிமை திருத்த சட்டத்தை பற்றி மத்திய உள்துறை அமைச்சர் தெளிவாக விளக்கிய பின்பும் ஸ்டாலின் தேவையில்லாமல் பிரச்சினை செய்கிறார் என்றும் இதனை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.

திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் நடத்திய பேரணிக்கு 50 ஆயிரம் பேர் வருவார்கள் என எதிர்பார்த்து 15 ஆயிரம் போலீசாரை பாதுகாப்புக்கு அனுப்பினோம், ஆனால் அங்கு 5 ஆயிரம் முதல் 8 ஆயிரம் பேர் மட்டுமே பேரணியின் பங்கேற்றதாக கூறினார்.

காவல்துறையின் மனித சக்தியை திமுகவினர் வீண் அடித்து விட்டதாகவும் குற்றம்சாட்டினார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of