“இதுக்குலாம் அவர் தான் காரணம்..” ரஜினி மகளின் 2-வது திருமணம் குறித்து பேசிய செல்லூர் ராஜூ..!

333

பெரியார் பற்றி ரஜினி கூறிய கருத்து பற்றி அரசியல் தலைவர்கள் பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள ஊராட்சி தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்களுக்கான அறிமுக கூட்டம், தமிழ்நாடு ஓட்டலில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், அமைச்சர் செல்லூர் ராஜு, மாவட்ட ஆட்சியர் வினய், சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழச்சியை தொடர்ந்து, அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார். அ

ப்போது பேசிய அவர், ரஜினி எப்போதும் நிதானமாக பேசுபவர். ஆனால் இந்த விஷயத்தில் அவரை யாரோ தவறாக வழிநடத்துகின்றனர் என்று தெரிவித்தார்.

மேலும், தீண்டாமை ஒழிப்பு, ஜாதி ஒழிப்புக்காக அவர் ஆற்றிய பங்கினை யாரும் மறுக்க முடியாது என்று கூறிய செல்லூர் ராஜு, ரஜினி தனது மகளுக்கு 2-வது திருமணம் நடத்துகிறார் என்றால், அதற்கு பெரியாரின் கொள்கைகள் தான் காரணம் என்று தெரிவத்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of