“செல்போன் கண்டுபிடித்தவனைக் கண்டால் மிதிக்க வேண்டும்” அமைச்சரின் வைரல் பேச்சு..! காரணம் இது தான்..!

279

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கானாடுகாத்தானில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பங்கேற்று பேசிய அமைச்சர் பாஸ்கரன், செல்போனினால் இளைஞர்கள் பலர் தீய வழிக்கு செல்கின்றனர் என கூறினார்.

மேலும் செல்போனை கண்டுபிடித்தவனைக் கண்டால் மிதிக்க வேண்டும் போல் உள்ளது என கூறிய அவர், மடிக்கணினியை மாணவர்கள் நல்ல விஷயங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.