அதிமுக MLA சதன் பிரபாகருக்கு கொரோனா பாதிப்பு

226

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு தரப்பு மக்களுக்கும் தொற்று பரவி வருகிறது. ரிஷிவந்தியம், செய்யூர், செஞ்சி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேபோல் ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ. பழனியும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுக்கிறார். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற தொகுதி அதிமுக எம்எல்ஏ. சதன் பிரபாகருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

சதன் பிரபாகர், அவரது மகன் மற்றும் உதவியாளர் என 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்ப்டடுள்ளது.

இதனையடுத்து அவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. கொரோனா தொற்றால் திமுக எம்எல்ஏ. ஜெ. அன்பழகன் மரணத்தை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of