தாமரை ஆளாத மாநிலங்களை மத்திய அரசு மாற்றாந்தாய் போக்கோடு நடத்துகிறது – அதிமுக

387
namadhu-amma

அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா நாளிதழில், ஆவேசக் கூச்சலும், அடிவயிறு எரிச்சலும் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

அதில் தற்போதைய மத்திய அரசின் ஆட்சியில் ஊழல் இல்லை என்றாலும், பெட்ரோல், டீசல் விலையேற்றம் பெருங் கவலை தருவதாக கூறப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை ஏறினால் அனைத்து பொருட்களின் விலையும் ஏறுமே என்ற சாமானியனின் கவலை அரசுக்கு புரியலையே என்றும் சிலிண்டர் விலை கேட்டு அடித்தட்டு மக்களுக்கு அடிவயிறு எரிவதை கண்டும் மத்திய அரசு எதுவுமே தெரியாததாது போல் அபாரமாய் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாமரை ஆளாத மாநிலங்களை மத்திய அரசு மாற்றந்தாய் போக்கோடு நடத்துவதாகவும் அதில் குறிப்படப்பட்டுள்ளது.