மேகதாது விவகாரத்தில் தமிழக அரசின் அடி, நேராக நெத்தியடி தான்

682

மேகதாது விவகாரத்தில் தமிழக அரசின் அடி, நேராக நெத்தியடி தான் என்று மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்திற்கு முழுமையாக மொட்டையடித்த வரிகொடா இயக்கம் பற்றி பேசுவது நகைப்புக்குரியது என்று கூறினார்.

வரிகொடா இயக்கம் என்பது இந்திய இறையாண்மைக்கு ஏற்றுக் கொள்ள முடியாத கருத்தாகும் என்று ஜெயகுமார் தெரிவித்தார்.

காவிரி உரிமையை பெற்றது அதிமுக அரசு என்றும் மாநில உரிமையை எந்த விதத்திலும் தமிழக அரசு விட்டுக் கொடுக்காது என்று அவர் தெரிவித்தார்.

மேகதாது விவகராத்தில் எங்களுடைய அடி நேராக நெத்தியடி தான் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Advertisement