விதிமுறைகளை மீறியதாக அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு

505

விதிமுறைகளை மீறியதாக அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பாவிற்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடர்ந்த விதிமுறை மீறல் புகார் மனுவில், சுகாதார நல்வாழ்வு விழிப்புணர்வு பிரச்சாரத்தின் போது இருசக்கர வாகனத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஹெல்மெட் அணியாமல் சென்றார் என்றும், சர்கார் திரைப்பட பிரச்சனையில் அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லாப்பா சட்டம் ஒழுங்கு பாதிக்கும் வகையில் பொது சொத்துக்கு சேதம் விளைவிக்கும் வகையில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார் என்றும், இந்த இருவரின் மீதும் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவேலு அமர்வு , இருவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணை டிசம்பர்
17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.