தமிழகத்தை பொறுத்த வரை எப்போதும் கழகங்களின் ஆட்சிதான் நடைபெறும்

274

தமிழகத்தை பொறுத்த வரை எப்போதும் கழகங்களின் ஆட்சிதான் நடைபெறும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 5 மாநில தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை பா.ஜ.க ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார். கஜா புயல் பாதிப்புகள் குறித்து மத்திய அரசு கேட்ட கூடுதல் விவரங்களை நேற்று அனுப்பிவிட்டதாக தெரிவித்தார். கர்நாடக அரசு கபினி, ஹேமாவதி போன்ற அணைகளை கட்டியதால் தமிழகம் பாலைவனமாக மாறியுள்ளதாக வேதனை தெரிவித்தார்.

கர்நாடக அரசு ஒவ்வொரு அணை கட்டும் போதும் தமிழகம் எதிர்ப்பு தெரிவிப்பதாக குறிப்பிட்ட அவர், மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்திற்கு எப்படி தண்ணீர் கிடைக்கும் என்று கேள்வி எழுப்பினார். இதுவரை உச்சநீதிமன்ற தீர்ப்பை கர்நாடக அரசு மதித்ததாக வரலாறு இல்லை என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.