இந்திய முஸ்லீம்களை பாகிஸ்தானுக்கு அனுப்ப வழக்கு!

553

வழக்கறிஞர் ஒருவர் நேற்று உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார்.

இந்த மனுவை பார்த்த நீதிபதி ரோகிந்தன் நரிமன், சீரியஸாகவே இந்த மனுவை விசாரிக்க வேண்டுமா? இந்த மனு மீது வாதாடப்போகிறீர்களா? என கோபத்துடன் கேட்டார்.

இதற்கு அந்த வழக்கறிஞர் தயக்கத்துடன் இல்லை என்றார். இதையடுத்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

சில நேரங்களில் சிலர் முஸ்லிம்களை பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும் என்று அவதூறாக பேசி வருவது உண்டு.

ஆனால் தற்போது வழக்கறிஞர் ஒருவர் நீதிமன்றத்திற்கே சென்று வழக்கு தொடர்ந்தது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.