28 ஆண்டுகளுக்கு பின் சீனா பொருளாதார வளர்ச்சியில் சரிவு

533

சீனா வெளியிட்டுள்ள புள்ளி விபர அறிக்கையில், 2018 ம் ஆண்டின் இறுதி காலாண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 28 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.ஏஎப்பி நிறுவனம் நடத்திய ஆய்வின் அடிப்படையில் இந்த புள்ளி விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

உலகின் 2வது பொருளாதார நாடான சீனாவின் வளர்ச்சி கடந்த ஆண்டில் 6.6 சதவீதம் சரிவடைந்துள்ளதாகவும் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான கால அளவில் மட்டும் 6.4 சதவீதம் சரிந்துள்ளதாகவும் சீன தேசிய புள்ளியியல் கழகம் தெரிவித்துள்ளது.

ஆனால் 2018 ம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சியை 6.5 சதவீதம் அளவிற்கு உயர்த்த சீன அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது.

அமெரிக்கா உடனான வர்த்தக போரே சீனாவின் பொருளாதார வளர்ச்சி சரிவடைந்துள்ளதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of