வானை வாய் பிளக்க வைத்த சூப்பர் மூன்…, ஆச்சரியத்தின் உச்சத்தில் பொதுமக்கள்

448

இருண்ட உலகிற்க ஒளியானவள்…, வளர்ந்தாலும், தேய்ந்தாலும் அழகானவள்…, வானில் பிறைசூடா மணிமகுடம் கொண்டவள் அவளே நிலவு…, என நிலவின் அழகை சொல்ல முழுமையான வார்த்தைகள் இன்னும் இவ்வுலகில் இல்லை.

இந்நிலையில், வழக்கமாக தெரியும் நிலவின் அளவை விட இன்று தெரியும் நிலவின் அளவானது 15 முதல் 30 சதவிகிதம் பெரியதாக தெரியும் என வானியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.இந்த நிலவை ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் நம்மால் பார்க்க முடியும். இதனை அமெரிக்காவில் “சூப்பர் ஸ்னோ மூன்” என்று சொல்வராகள். ஏன் என்றால் இப்போது அமெரிக்காவில் இது பனிக்காலம் என்பதால் இப்பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றனர்.

இந்த சூப்பர் மூனை பூமியில் உள்ள அனைத்து நாடுகளிலிருந்தும் பார்க்க முடியும். குறிப்பாக இந்தியாவில் உள்ள அத்தனை நகரங்களிலிருந்தும் வெறும் கண்களாலே இந்த நிலவை பார்க்க முடியும்.

இன்று இந்திய நேரப்படி இரவு 9:30 மணி அளவில் சூப்பர் மூனை காண முடியும். இதே போல், அதிகாலையில் நிலவு மறையும் நேரத்திலும் சூப்பர் மூனை பார்க்க முடியும் என வானியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of