தேர்தல் முடிவிற்கு பின் மீண்டும் மோடி சர்க்கார் அமையும் – பிரதமர் மோடி

198

பிரதமர் நரேந்திர மோடி சத்தீஸ்கர் மாநிலத்தின் கோப்ரா மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

நக்சலைட்களுடன் தொடர்பு வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சி தற்போது நாட்டை துண்டாட துடிக்கும் சில சக்திகளுடன் உறவு வைத்திருப்பதாக தனது உரையில் மோடி குறிப்பிட்டார்.

காங்கிரஸ் கட்சியின் சின்னமான கை இந்த நாட்டை காக்க வந்த கை அல்ல. நாட்டின் முன்னேற்றத்தை அழிக்க வந்த கை.

அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் முடிந்து மே 23-ம் தேதி முடிவுகள் வெளியான பின்னர் மத்தியில் மீண்டும் ’மோடி சர்க்கார் அமையும்’ எனவும் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of