ஜம்மு-காஷ்மீரில் நள்ளிரவு முதல் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்

231

ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி நிறைவடைந்ததை தொடர்ந்து நள்ளிரவு முதல் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது.

காஷ்மீரில், கடந்த 2014ல் நடந்த சட்டசபை தேர்தலுக்கு பின், மக்கள் ஜனநாயக கட்சி, பா.ஜ.க, இணைந்து, கூட்டணி ஆட்சி அமைத்தன. பின்னர் இரு கட்சிகள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளையடுத்து, மெஹபூபா முப்தி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை, பா.ஜ.க, விலக்கியது.

இதனையடுத்து அங்கு சட்டப்பேரவை கலைக்கப்பட்டு ஆளுநர் ஆட்சி அமலானது. 6 மாதத்திற்குள் அங்கு புதிய அமைச்சரவை பதவியேற்காததால் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, நள்ளிரவு முதல் காஷ்மீரில் குடிரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது.