பாகிஸ்தானை தரமிறக்கும் முயற்சியில் தீவிரம் காட்டும் இந்தியா

922

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு சர்வதேச அரங்கில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் பணியில் இந்தியா மேற்கொண்டு வருகிறது. முதல் கட்டமாக பாகிஸ்தானுக்கு இந்தியா கொடுத்த “சிறப்பு அந்தஸ்தை” ரத்து செய்தது.இதனால், பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை மற்றும் கூடுதல் வரி உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய வர்த்தக அமைச்சகம் மேற்கொள்ள உள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக வர்த்தக முடக்கத்தை இந்தியா மேற்கொள்வதன் மூலம் அந்நாடு பெரிய பொருளாதார சரிவடையும் என கூறப்படுகிறது. ஏற்கனவே சரிவில் இருக்கும் பாகிஸ்தானின் பொருளாதாரத்தை மேம்படுத்த அந்நாட்டு பிரதமரும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

குறிப்பாக, காஷ்மீரில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய கார் குண்டு வெடிப்பில், பாகிஸ்தான் அரசு அமைப்புகளுக்கு தொடர்பு இருக்கிறது என கூறி ஒரு ஆவணத்துடன் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இயங்கி வருகிற எப்.ஏ.டி.எப். என்னும் நிதி நடவடிக்கை பணிக்குழுவை இந்தியா நாடுகிறது.

இந்த அமைப்பு, இந்தியாவின் ஆவணத்தில் திருப்தி கொள்கிற பட்சத்தில், சர்வதேச நிதியம் ஐ.எம்.எப்., மற்றும் உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி, ஐரோப்பிய கூட்டமைப்பு ஆகியவை பாகிஸ்தானை தரம் இறக்குவதற்கு வாய்ப்பு உள்ளது. அப்படி தரம் இறக்குகிறபோது, அந்த அமைப்புகளிடம் இருந்து பாகிஸ்தானுக்கு நிதி உதவி கிடைக்காது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of