ஓய்வுக்கு பிறகு தோனி எடுக்கும் அதிரடி முடிவு..? பாஜக நிர்வாகி உறுதி!

807

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிப் போட்டியில், இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் மோதியது. இதில் இந்திய அணி கடைசி வரை போராடி தோல்வியை தழுவியது.

இந்த உலகக்கோப்பை கிரிக்கொட் போட்டியை தொடர்ந்து சர்வதே கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெற இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

இதுகுறித்து அவரது ரசிகர்கள் இணையதளங்களில் சோகமாக பதிவுகள் வெளியிட்ட வந்த நிலையில் தோனி வழக்கம் போல் அமைதியாக இருந்து வருகிறார். இதனிடையே தோனி பாஜகவில் இணைய இருப்பதாகவும் தகவல் வெளியாகி வந்தது.

இந்நிலையில் பாஜகவைச் சேர்ந்த மத்திய முன்னாள் அமைச்சர் சஞ்சய் பஸ்வான் தோனி பாஜகவில் இணைவது உறுதி என்று தெரிவித்துள்ளார். மேலும் பேசியுள்ள அவர், பாஜகவில் தோனி இணைவது குறித்து அவரது ஓய்வுக்குப் பின்னரே தெரியவரும்.

தோனி உலகப்புகழ் பெற்ற விளையாட்டு வீரர். அவர் கட்சியுடன் இணைவது குறித்து முயற்சி எடுத்து வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement