“நிவாரணத் தொகை தாறோம்.. ஆனா..” – புதுக்கோட்டையில் நச் ரூல்ஸ்

391

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆயிரத்து 2 ரேஷன் கடைகளிலும், நிவாரணத் தொகை மற்றும் ரேஷன் பொருட்கள் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. இந்நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ரேஷன் கடைகளுக்கு வரும் பொதுமக்களின் கைகளில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்படுகிறது.

பின்னர் அதன் மூலம் கைகளை கழுவிய பின்னரே, ரேஷன் பொருட்கள் மற்றும் நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது.

மேலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் விதமாகவும், மக்கள் நீண்ட வரிசைகளில் நிற்பதை தடுக்கும் நோக்கிலும், ரேஷன் கடைகள் வெளியே வரையப்பட்ட வட்டத்தில் சேர் போடப்பட்டு, அதில் பொதுமக்கள் அமர வைக்கப்படுகின்றனர்.

இதேபோல் நாகை மாவட்டத்தில் உள்ள 786 ரேஷன் கடைகளில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையோடு ரேஷன் பொருட்கள் மற்றும் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.

ரேஷன் கடைகளுக்கு வரும் பொதுமக்கள் தங்கள் கைகளை கழுவும் வகையில், கிருமி நாசினி, தண்ணீர் உள்ளிட்டவை வைக்கப்பட்டிருந்தது. மேலும் வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு, பந்தல் போடப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of