மீண்டும் லலிதா ஜுவல்லரிக்கு வந்த பேரிடி..!

2536

சென்னை தியாகராய நகரில் உள்ள லலிதா ஜுவல்லரியில் நகை அளவீடு செய்யும் பணியின்போது, 5 கிலோ தங்க நகைகள் குறைந்திருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து லலிதா ஜுவல்லரி கிளை மேலாளர் முருகன் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதனடிப்படையில், விசாரணையை தொடங்கிய போலீசார், லலிதா ஜுவல்லரியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது அங்கு பணியில் இருந்த ராஜஸ்தானைச் சேர்ந்த பிரவின்குமார் சிங் என்பவர் நகைகளை திருடியது தெரியவந்தது.

நகைகளை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருப்பதால், தலைமறைவான பிரவின்குமார் சிங்கை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கு முன்னதாக லலிதா ஜுவல்லரியில் பெரும் கொள்ளை சம்பவம் நடைபெற்று பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement