காவல்துறை தேர்வின் வயது உச்சவரம்பை உயர்த்த வேண்டும் – நாராயணசாமி.

272
narayanasamy

காவல்துறை தேர்வின் வயது உச்சவரம்பை உயர்த்துவது குறித்து உள்துறை அமைச்சகத்திடம் முறையிட உள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

தந்தை பெரியாரின் 140 வது பிறந்தநாளையொட்டி காமராஜர் சாலையில் உள்ள அவரது சிலைக்கு புதுச்சேரி அரசு சார்பில் முதலமைச்சர் நாராயணசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி, காவல் துறையில் 390 காவலர் பணியிடங்களுக்கு இதுவரை 7000 விண்ணப்பங்கள் வந்துள்ளன என்றும், வயது வரம்பை 22 ல் இருந்து 24 ஆக உயர்த்த வேண்டும் என்ற மக்களின் விருப்பத்திற்கு கிரண்பேடிக்கு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறினார்.

மேலும், காவலர் பணிக்கான விண்ணப்ப கால நீட்டிப்பு குறித்து உள்துறை அமைச்சக அதிகாரிகளுடன் பேசி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here