விஷத்தை எடுக்க வாயில் பொருத்திய கருவி வெடித்து பெண் பலி

561

குடலில் இருந்த விஷத்தை எடுக்க பயன்படுத்தப்பட்ட கருவி வெடித்ததில் பெண் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆக்ரா அருகே ஜலாலி பகுதியை சேர்ந்தவர் ஷீலாதேவி (40). இவர் மயங்கிய நிலையில் ஆலம்பூர் சுப்கரா கிராமத்தில் விழுந்து கிடந்தார். அவர் வி‌ஷம் சாப்பிட்டு இருப்பது தெரிந்தது.

இதையடுத்து அவரை போலீசார் மீட்டு அலிகாரில் உள்ள ஜெ.என் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதனையில் ஷீலா தேவியின் குடலில் வி‌ஷம் இருப்பது தெரிந்தது.

இதையடுத்து ஷீலாதேவி வாயில் மருத்துவ கருவியை பொருத்திய சிறிய டியூப் மூலம் வி‌ஷத்தை வெளியே எடுக்க முயற்சித்தனர்.

அப்போது திடீரென்று ஷீலா தேவி வாயில் இருந்த மருத்துவ கருவி வெடித்தது. அந்த அறையில் தீப்பிடித்து புகை மண்டலமானது. இதையடுத்து டாக்டர்கள், ஊழியர்கள் தீயை அணைத்தனர்.

மருத்துவ கருவி வெடித்ததில் ஷீலா தேவி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் டாக்டர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். ஷீலாதேவி உடலை பிரேத பரிசோதனை நடத்த அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து டாக்டர் ஒருவர் கூறும் போது, எங்கு தவறு நடந்துள்ளது என்பதை ஆராய்ந்து வருகிறோம். ஷீலாதேவி, அலுமினியம் பாஸ்பேட் உள்ள மாத்திரைகளை சாப்பிட்டு இருக்க வாய்ப்பு உள்ளது. அதிலிருந்து பாஸ்பென் வாயு மற்றும் அலுமினியம் ஆக்சைடு வாயு வெளியேறி இருக்கலாம்.

இந்த வாயுக்கள் எளிதில் எரியக் கூடிய தன்மை கொண்டது. அதனால் மருத்துவ கருவி வெடித்து இருக்கலாம் என்றார். பிரேத பரிசோனைக்கு பிறகே ஷீலாதேவி எந்தவிதமான வி‌ஷத்தை சாப்பிட்டார் என்பது தெரிய வரும்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of