தமிழகத்தில் உள்ள கிராமப்புறங்களில் விவசாயத்துறையை மேம்படுத்தும் வகையில் 300 நவீன தொழில் நுட்ப நிறுவனங்கள் அமைய உள்ளதாக அக்னி நிறுவனத்தின் நிறுவனர் அக்னீஸ்வர் ஜெயப்பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வரும் 23, 24 ஆம் தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இந்நிலையில் பிரேஸில் நாட்டை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் அதிகாரிகள், தலைமைச் செயலகத்தில் தமிழக தொழிற்துறை அமைச்சரை நேற்று சந்தித்தனர்.

அப்போது தமிழகத்தில் கிராமப்புற பகுதிகளில் வளர்ச்சியை அதிகப்படுத்தும் நோக்கத்தில் தொழில் நிறுவனம் அமைப்பதற்கான ஒப்புதலை பெற்றனர். தமிழகத்தில் உள்ள கிராமப்புறங்களில் விவசாயத்துறையை மேம்படுத்தும் வகையில் 300 நவீன தொழில் நுட்ப நிறுவனங்கள் அமைய உள்ளதாக அக்னீஸ்வர் ஜெயபிரகாஷ் தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of