இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதாக இருந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் இடைத்தரகர் மாயம்

557

முக்கியப் பிரமுகர்கள் பயணம் செய்வதற்கான 12 ஹெலிகாப்டர்கள் வாங்குவது தொடர்பாக, இத்தாலியின் பின்மெக்கனிக்கா குழுமத்தின் அகஸ்டா வெஸ்ட் லேண்ட் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் போட்டது.

3,600 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தைப் பெற அந்த நிறுவனம் இந்தியர்களுக்கு 10 சதவீதம் கமிஷன் வழங்கியதாக புகார் எழுந்தது. இதையடுத்து 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

இதுதொடர்பாக இத்தாலியில் தொடரப்பட்ட வழக்கில், லஞ்சம் வழங்கியதற்காக அந்த நிறுவனத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் 2 பேருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது.

இதற்கிடையே, அகஸ்டா வெஸ்ட் லேண்ட் நிறுவனத்தின் இந்திய தலைவர் பீட்டர் ஹுலெட்டுக்கு இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல், 2008-ல் எழுதிய ஒரு கடிதத்தில், ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தின் பின்னணியில், முக்கிய காரணியாக, ‘சிக்னோரா காந்தி’ செயல்பட்டதாக, குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கில் ஏற்கனவே மைக்கேல்லுக்கு எதிராக அமலாக்கத்துறை 2016-ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. இதற்கிடையில், மைக்கேல் கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் கைது செய்யப்பட்டார்.

அவரை நாடு கடத்துவது தொடர்பான வழக்கு துபாய் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் மைக்கேலை நாடு கடத்த துபாய் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிறிஸ்டின் மைக்கேல் இந்தியா கொண்டு வரப்பட்டால், வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்படும் என கருதப்பட்ட நிலையில், கிறிஸ்டின் மைக்கேல் காணவில்லை என்று அவருடைய வழக்கறிஞர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of