மோடி பயணம் முடியட்டும் என காத்திருக்கிறீர்களா? – அஹமது படேல் கடும் தாக்கு

240

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பிற்கான தாமதத்திற்கு பிரதமர் அலுவலகமே காரணம் என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் அகமது பட்டேல், பொதுத் தேர்தல் தேதிகளை அறிவிப்பதற்கு முன்பாக பிரதமர் மோடி தனது அரசு முறை பயண நிகழ்வுகள் அனைத்தையும் நிறைவு செய்யட்டும் என்று தேர்தல் ஆணையம் காத்துக் கொண்டிருக்கிறதா என கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசு நிகழ்ச்சிகளை பயன்படுத்தி அரசியல் கூட்டங்களுக்கு, தொலைக்காட்சி, வானொலி, மற்றும் நாளிதழ்களில் விளம்பரங்களை வெளியிடுவதாக குற்றம் சாட்டினார். 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் தேதி மார்ச் 5ஆம் தேதி அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of