அதிமுக, பாமகவிற்கு உள்ளாட்சி தேர்தலில் உரிய பாடம் புகட்ட வேண்டும் – தொல். திருமாவளவன்

300

குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்படுத்திய அதிமுக, பாமகவிற்கு உள்ளாட்சி தேர்தலில் உரிய பாடம் புகட்ட வேண்டும் என தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக அரசு மேற்கொண்டு வரும் மக்கள் விரோத நடவடிக்கை தேசவிரோத சட்டங்களுக்கு உறுதுணையாக அதிமுக அரசு செயல்பட்டு வருவதாக கூறினார்.

ராணுவத்தில் எந்த அளவுக்கு அரசியல் தலையீடு இருக்கிறது என்பதை, ராணுவ தலைவரின் பேச்சு காட்டுகிறது எனவும் அவர் கூறினார்.

Advertisement