திருவாரூர் இடைத்தேர்தல் வேட்பாளரை தேர்வு செய்வதற்காக, அ.தி.மு.க. ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் இன்று மாலை கூடுகிறது.

திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிட, 52 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 13 லட்சம் ரூபாய் கட்டணம் பெறப்பட்டுள்ளதாகவும் அ.தி.மு.க தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று மாலை நடைபெறும் அ.தி.மு.க ஆட்சிமன்றக்குழுக் கூட்டத்தில் விருப்ப மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்பட உள்ளது. ஆட்சிமன்றக் குழுவில், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, தமிழ்மகன் உசேன், பா.வளர்மதி, எம்.பி.க்கள் பி.வேணுகோபால், ஜஸ்டின் செல்வராஜ் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of