கூட்டணியில் இணைந்தது தேமுதிக. 4 தொகுதிகள் ஒதுக்கீடு.

850
aiadmkdmdk11.3.19

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 18-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி நடைபெறுகிறது என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று அறிவித்தார்.

kutani

நீண்டநாள் இழுபறியில் இருந்த தேமுதிக – அதிமுக கூட்டணி இறுதியில் இன்று முடிவானது. தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக தரப்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அமைச்சர்கள் ஆகியோர் தேமுதிகவை சேர்ந்த பொது செயலாளர் விஜயகாந்த், பிரேமலதா மற்றும் சுதீஷ் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், 21 சட்டசபை தொகுதியில் தேமுதிக ஆதரவு அளிக்கும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அறிவித்தார். இதற்கான ஒப்பந்தத்தில் இருதரப்பினரும் கையெழுத்திட்டனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of