விஸ்வரூபம் எடுக்கும் சுபஸ்ரீ வழக்கு..! கைது செய்யப்பட்ட முக்கிய நபர்..!

887

சென்னை குரோம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுபஸ்ரீ. இவர் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். பணி முடித்துவிட்டு சென்னை பள்ளிக்கரணை வழியாக வீட்டிற்கு வந்துக்கொண்டிருந்தார்.

அப்போது அதிமுக பிரமுகர் வைத்த பேனர் விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், இளம்பெண் சுபஸ்ரீ லாரி ஏறி பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து வழக்கை விசாரிக்க முடிவு செய்தது.

இதையடுத்து தனிப்படை அமைத்து வழக்கின் முக்கிய குற்றவாளியான அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் தேடப்பட்டு வந்தார். இந்நிலையில் இன்று தருமபுரியில் பதுங்கி இருந்து ஜெயகோபால், தனிப்படை போலீசார் மூலம் கைது செய்யப்பட்டார்.

Advertisement