ஈழ தமிழர்களை பற்றி பேச அ.தி.மு.க அரசுக்கு தகுதியில்லை – வைகோ

721

ஐ.நா.வில் தனி ஈழம் தொடர்பாக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்திற்கு எதிராக, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தை தடையை மீறி முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்பட்டது.

இந்த வழக்கில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் நேற்று மீண்டும் சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது திருமுருகன் காந்தி மீது போடப்பட்டிருந்த பிடிவாரண்டை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட திருமுருகன் காந்தியை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, திருமுருகன் காந்தியை ஈவு இறக்கம் இல்லாமல் இந்த அரசு வஞ்சித்து வருவதாக கூறினார். ஈழ தமிழர்கள் பற்றி பேச இந்த அரசுக்கு தகுதியில்லை என்றும் தெரிவித்தார்.

Advertisement