எத்தனை அமாவாசை வந்தாலும் அதிமுக அரசு தொடரும் – விஜயபாஸ்கர்

741

கரூர் மாவட்டம் ஆத்தூர் அருகே அதிமுக மாவட்ட மாணவர் அணி இணை செயலாளர் முருகேசன் முன்னிலையில், சுமார் 300-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.

இந்நிகழ்ச்சியில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அதிமுகவில் இணைந்த அணைவருக்கும் அதிமுக கரை துண்டை அணிவித்து அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார், இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், அம்மாவின் மறைவிற்கு பிறகு இரண்டு அமாவாசை கூட ஆட்சி தாங்காது என்று தெரிவித்தனர்.

ஆனால் இப்போது அது முடிந்து அதன் பிறகு 24-அமாவாசைகளும் முடிந்து விட்டது என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர் தற்போது மீதமுள்ள இரண்டேமுக்கால் ஆண்டு உள்ளது. அந்த அமாவாசைகளையும் முழுமையாக நிறைவு செய்யும் என்றும், எத்தனை அமாவசை வந்தாலும் அம்மா ஆட்சியை அசைக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

Advertisement