மத்திய அரசுக்கு அதிமுக ஆதரவு தருவது ஏன் ஆர்.பி. உதயக்குமார் விளக்கம்

415
R.B-Udhayakumar

மத்திய அரசுக்கு அதிமுக ஆதரவு தருவது ஏன் என வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

மதுரை திருபரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தனக்கன்குளம், நிலையூர், சூரக்குளம், வலையபட்டி, வலையங்குளம் உள்ளிட்ட 5 இடங்களில் மக்கள் நலத்திட்ட உதவிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்,பி,உதயகுமார் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்ணா காலத்தில் இருந்தே மத்திய, மாநில அரசுகள் ஒரு நல்ல உறவை வைத்து வருவதாகவும், அதன் அடிப்படையிலே தான் தற்போது உள்ள பாஜக அரசோடு தமிழக அரசு இணக்கமாக உள்ளது என தெரிவித்தார்.

மத்தியில் பாஜக அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாக பாராட்டிய அவர், இந்தியா முழுவதும் ஒரு ஆளுகைக்குள் கொண்டு வர வேண்டும் என்ற லட்சியத்தோடு மக்கள் நலன் சார்ந்த அதிக திட்டங்களை மத்திய அரசு செய்து வருவதாக கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here